எமது இராணுவத்தினர் நாட்டில் புரையோடிப் போயிருந்த பங்கரவாதத்தை முற்றாக ஒழித்ததன் மூலம் தாங்கள் உலக நாடுகளில் உள்ள மிகச் சிறந்த இராணுவ வீரர்களென்பதை நிரூபித்துள்ளனர் என இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவுக்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டிருந்த இராணுவத் தளபதி அங்கு உரை நிகழ்த்தும்போதே இவ்வாறு கூறினார்.
எமது இராணுவ வீரர்களின் தார்மீக உணர்வு உச்ச கட்டத்தில் காணப்படுகிறது. உலக நாடுகளில் உள்ள ஒழுக்காற்றல் மிக்க இராணுவங்களுள் ஒன்றாக இலங்கை இராணுவமும் கருதப்படுகிறது. எமது இராணுவ வீரர்கள் யுத்த களத்தில் காண்பித்த உச்ச கட்ட திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. எதிர்கால பாதுகாப்புத் திட்டத்தை கருத்திற்கொண்டு இராணுவம் சகல வழிகளிலும் மேலும் பலப்படுத்தப்படும். பயங்கரவாதத்துக்கு எதிரான வெற்றியில் ஜனாதிபதியின் தலைமைத்துவமும் பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டலும் மிக முக்கியமானவை என்றும் அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.