பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 3 வருடங்களாக கொழும்பில் தங்கியிருந்த இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் த. கனகசபை இன்று அதிகாலை தனது சொந்தக் கிராமமான களுதாவளைக்கு திரும்பியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக கடந்த 3 வருடங்களாக கொழும்பிலேயே தங்கியிருக்கின்றனர். தனது உறவினர் ஒருவரின் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காகவே இன்று காலை த.கனகசபை தனது கிராமத்திற்கு குடும்பத்துடன் திரும்பியுள்ளார்.