ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையில் இடம்பெறும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறி நேற்று நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பான் கீ மூனுக்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் ‘உலக மனிதாபிமான விருது’ கிடைக்கவுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டத்தின்போது, வவுனியா மெனிக்பார்மில் உள்ள தடுப்பு முகாம்களை மூட வேண்டும் எனவும் அதில் ஈடுபட்டோர் கோரியுள்ளனர்.இதன் காரணமாக மாலை 6.30க்கு நடைபெறவிருந்த பான் கீ மூனின் ஊடக சந்திப்பு, இரவு 8.35 வரையில் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.