இலங் கையில் பன்றிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ள இரண்டாவது நோயாளியும் நேற்று அடையாளம் காணப்பட்டார். முதன் முதலில் இந்நோய் தாக்கத்துக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் ஆறு வயதுடைய சகோதரனே நொவல் இன்புளுவன்சா ஏ/எச்1 என்1 எனும் பன்றிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் பீரிஸ் தெரிவித்தார்.
வத்தளையில் நடைபெறும் திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூரினூடாக குடும்பமொன்று கடந்த 14ம் திகதி இலங்கை வந்துள்ளது. சிங்கப்பூர் விமான நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட சோதனையின் போது அக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுமியொருவர் பன்றிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்ததையடுத்து அச்சிறுமியும் அவருடைய தாயாரும் சிக்கப்பூரிலேயே தடுத்து வைக்கப்பட்டனர். ஏனையோர் மாத்திரம் இலங்கை வர அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இலங்கை வந்திருக்கும் அக்குடும்பத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய சிறுவன் கடும் காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளார். இது தொடர்பாக சிறுவனின் தந்தை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு அறிவித்ததையடுத்து தொற்று நோய் அவசர சிகிச்சைப் பிரிவில் மேற்படி சிறுவன் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட போது அச்சிறுவன் பன்றிக் காச்சலினால் பீடிக்கப்பட்டது ஊர்ஜிதமானது. இச் சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாக் கிழமை இடம்பெற்றது.
இதனையடுத்து இச் சிறுவனின் குடும்பத்தார் மற்றும் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் அனைவரும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவினரின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டனர்.
ஏற்கனவே நோய்த் தாக்கத்துக்குள்ளான சிறுவனுடன் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்துள்ள அவனது ஆறு வயதுடைய சகோதரனும் கடும் காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.
இவரை அம்பியூலன்ஸ் மூலம் தொற்று நோய் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வரவ ழைத்து பரிசோதித்ததில் இச்சிறுவனும் நொவல் இன்புளுவன்சா ஏ/எச்1என்1 எனும் வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பது ஊர்ஜிதமாகியுள்ளது.
பன்றிக் காய்ச்சலினால் உயிராபத்து ஏற்படும் என்பது தவறான கருத்து எனக் கூறிய விசேட வைத்திய நிபுணர் சுதத் பீரிஸ் அதனை உடனடியாக குணப்படுத்தாவிட்டால் உடலில் பல சிக்கல்கள் தோன் றலாமென கூறினார். இலங்கையில் இந் நோய்க்கான தடுப்பு மருந்து போதியளவு கையிருப்பிலுள்ளதுடன், 20 பிராந்தியங்களுக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், பொதுமக்கள் இந்நோய் குறித்து வீணாக அச்சப்படத் தேவை இல்லை என்றும் கூறினார். அதேசமயம் நோய் அறி குறிகளை அலட்சியம் செய்யாமல் அவதானமாக இருப்பது அவசியமெனவும் அவர் குறிப்பிட்டார்