வடக்கில் வசந்தம் இளமைக்கு உதயம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கனடிய உலக பல்கலைக்கழக நிதி உதவியுடன் சுமார் 30 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இளைஞர் பயிற்சி நிலையத்தினை திறந்து வைக்க ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ இன்று செவ்வாய் மாலை 3 மணிக்கு வவுனியா வரவுள்ளார்.
தேக்கம்காடு இளைஞர் சேவைகள் மன்ற பயிற்சி நிலைய வளவினுள் நிர்மாணிக்கப்பட்ட இந்த பயிற்சி நிலைய திறப்பு விழாவில் இளைஞர் விவகார அமைச்சர் பிவித்திரா வன்னியாராச்சி, மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் உட்பட பலர் இந்த வைபவத்தில் கலந்து கொள்வார்கள்.
தொழில் வாய்ப்பினை முன்னேற்றும் நோக்குடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் பல பயிற்சி நெறிகளை நடத்தி வருகின்றது. இதேபோன்றதொரு பயிற்சி நிலையம் மன்னாரில் 20ம் திகதி திறந்துவைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது