இரானிய அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து தமக்கு நிறைய சந்தேகங்கள் இருப்பதாக அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
என்.பி.சி. என்னும் ஊடகத்துக்கு வழங்கிய நீண்ட செவ்வி ஒன்றில், இந்த விடயத்தில் நியாயமான ஒரு முடிவுக்கு வருவதற்கான போதுமான தரவுகள் இன்னமும் தமக்கு கிடைக்கவில்லை என்று பைடன் கூறியுள்ளார். முன்னதாக, இந்த தேர்தல் முடிவுகள் இரானிய மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் என்று அமெரிக்கா எதிர்ப்பார்ப்பதாக, அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் கூறியிருந்தார்.