‘உதுரு மிதுரு’ திட்டத்தின் கீழ் வவுனியாவில் இருந்து ஓமந்தை வரையான ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியது. செப்டம்பர் மாதத்தில் யாழ்தேவி ரயில் சேவை ஓமந்தைவரை இடம்பெறும் எனவும் அமைச்சு குறிப்பிட்டது.
கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான யாழ்தேவி ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக 20 வருடங்களின் பின் வவுனியாவில் இருந்தது தாண்டிக்குளம் வரை ஆரம்பிக்கப்பட்டது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள ரயில் நிலையங்களை நிர்மாணிக்கும் பொறுப்புக்களை அந்தந்த பிரதேச மக்கள் ஏற்றுள்ளனர். இதன்படி ஓமந்தை ரயில் நிலையத்தை நிர்மாணிக்கும் பொறுப்பை காலி மக்களும் யாழ். ரயில் நிலையத்தை அமைக்கும் பணியை ஹம்பாந்தோட்டை மக்களும் பொறுப்பேற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை நிர்மாணிக்கும் பணி 2010ல் பூர்த்தி செய்யப்பட உள்ளதோடு இதற்கு சகலரதும் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.