தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கப்படும் என தமிழ் திரைப்பட சீரமைப்பு குழுவினர் முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளனர். தமிழ் திரைப்பட சீரமைப்பு குழவினர் சென்னை தலைமை செயலகத்தில் முதல் முறையாக முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனை திருப்தியளிப்பதாக கூறிய அவர்கள் தமிழ் திரைப்படங்களுக்கு இனிமேல் தமிழில் பெயர் வைக்கப்படும் என உறுதியளித்தனர்.
முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி ரங்கநாதன், தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கப்படும் என உறுதியளித்தார்.