வவுனியாவின் இராணுவ ஆயுதக்கிடங்கை எரித்தது புலிகள் என வைகோ தெரிவிப்பு

12vaiko000.jpgவவுனி யாவில் இலங்கை இராணுவ ஆயுதக் களஞ்சியம் மீது, புலிகள் ஊடறுப்பு தாக்குதல் நடத்தியதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தென்காசியில் நெல்லை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக  செயல் வீரர்கள் கூட்டம், நாஞ்சில் சம்பத் தலைமையில் இடம்பெற்றது.

அக்கூட்டத்தில் வைகோ உரையாற்றுகையில்,
 
இலங்கையில் இராணுவம், கர்ப்பிணிகளையும், சிசுக்களையும் கொன்ற சம்பவங்கள், உலகில் வேறு எங்குமே நடந்ததில்லை என அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைப் பிரச்னையில், திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் கோபாலரத்னம், சிவப்பிரகாசம் தற்கொலை செய்து, உயிர் நீர்த்தனர்.

அவர்களுக்கு கூட இரங்கல் தெரிவிக்காதவர், தமிழக முதல்வர் கருணாநிதி என வைகோ குற்றம்சுமத்தியுள்ளார்.  வவுனியாவில் இலங்கை இராணுவ களஞ்சியத்தின் மீது புலிகள் ஊடறுப்பு தாக்குதல் நடத்தி, ஆயுதங்களை எரியச் செய்துள்ளனர். ஆனால், அந்த நிகழ்வு தற்செயலானது என, இராணுவம் கூறுவதாக வைகோ தெரிவித்தார்.

Show More
Leave a Reply to thurai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • சட்டம் பிள்ளை
    சட்டம் பிள்ளை

    ஐயா வைக்கோ -எம்மை கொஞ்சமாவது நிம்மதியாக இருக்க விட மாட்டீரோ?

    Reply
  • மாயா
    மாயா

    // திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் கோபாலரத்னம், சிவப்பிரகாசம் தற்கொலை செய்து, உயிர் நீர்த்தனர்.
    அவர்களுக்கு கூட இரங்கல் தெரிவிக்காதவர், தமிழக முதல்வர் கருணாநிதி என வைகோ குற்றம்சுமத்தியுள்ளார். //

    வீட்டுப் பிரச்சனைக்கெல்லாம் தீக்குளிப்போருக்கு இரங்கல் தெரிவிக்கும் முட்டாளாக கலைஞர் இல்லை. பிரபாகரன் இறந்தது தெரிந்தும் அவருக்கு இரங்கல்பா பாடி துரோகியாகிவிடக் கூடாதென்றும், இருக்கும் வாக்குகளை சிதைத்துவிடக் கூடாதென்றும் கலைஞர் அமைதியாக இருக்கிறார்.

    நீங்கள் , இறந்த உங்கள் தலைவருக்கே கூட ஒரு விளக்கு கொழுத்தவில்லையே?….வீரவணக்கம் என ஒரு முழக்கம் கூட இல்லையே? இவை கூடத் தெரியாத வைகோமாளியே அதற்குள் இராணுவ முகாமை கொழுத்தியதாக சூடேற்றுறீர்?

    ஐயா, தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இராணுவமே எரித்ததுதான் அது. இனி அந்த ஆயுதங்கள் அங்கு தேவையில்லை. அதை வைத்திருந்தால் ஆபத்து. எரித்துவிட்டார்கள். அரசு காப்புறுதியில் பணமும் பெற்று விடுவார்கள்.

    உங்கள் எதிர்ப்புகள் , இலங்கை அரசுக்கு ஆதரவானவையே தவிர எதிர்ப்பல்ல. உங்களைப் போன்றவர்களது வாய்தான் புலிகளுக்கு நாசமானது . தமிழ்நாடு காஷ்மீராகும்….இரத்த ஆறு ஓடும்…..கடைசியில் கண்ணீர் ஆறு கூட ஓடவில்லை. இனியாவது பேசாதிரும். நாத்தப் பேச்சுகள் வவுனியா முகாமிலிருக்கும் மக்கள் வீடுகளுக்கு போவதை நிரந்தரமாகத் தடுத்துவிடும். நீங்கள் அதை வைத்து வயிறு வளர்ப்பீர்கள். ஆனால் அந்த அப்பாவிகள் தொடர்ந்தும் வயிறு காய்ந்தே இறந்துவிடும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அட வை.கோமாளிக்கு மயிலிட்டியிலும் ஒரு ஆயுதக் கிடங்கு எரிந்தது தெரியாது போல. தெரிந்திருந்தால் அதையும் சேர்த்து எடுத்து விட்டிருப்பார். புலிகளின் தனது பெயரிலுள்ள பினாமிச் சொத்துகளை அபகரிப்பதற்காக பிரபாகரனின் மரணத்தையே ஒததுக் கொள்ளாதவர், அடுத்தவர் பற்றிக் கதைகிறா எனியும் புலுடா அரசியல் நடத்தலாமென நினைப்பவர் நிசமாகவே முழுக் கோமாளி தான்.

    Reply
  • palli.
    palli.

    பார்த்திபன் தவறாக நீங்கள் அண்ணன் சாமியை பார்க்கிறீர்கள்; புலிகள் நிர்வாகத்தில் வன்னியில் நடந்த சூறாவளியில் பலர் சிக்குண்டும் சிலர்
    இடம் தெரியாமலும் சிதைபட்டதால் அந்த நிர்வாகத்தை தற்காலிகமாக வழினடந்த சில பொறுப்புகளை பலரிடம் யாரோ கண்ணுக்கு தெரியாத ஒரு ஜீவன் ஒப்படைத்துள்ளார். இதில் அனைத்து பொறுப்பும் (டம்மிபிரபா) K P க்கும்; ராணுவ ஏச்சாளர் பொறுப்பு (இளம்திரையன்) வை கோவுக்கும்; அரசியல் பிழைப்பு (நடேசர்) இடைக்காட்டார் எனவும்; நிதி தொலைவை (தமிழேந்தி) டாக்குத்தரும்; கடல் வளத்தை (சூசை) நெடுமாறனும்;
    மகளீர் செலவை (மாலதி அல்லது ஜோதி) ஜனனாயக ஜனனி எனவும்; ஊடகதுறை (தயா வாத்தி) இப்படியே தொடர்கிறது பட்டியல் பரவசம்;

    Reply
  • rony
    rony

    கடந்த தேர்தலிலிருந்து வைக்கோவுக்கு மேல்தட்டில் சிறிது பாதிப்பு எனறு ஒரு இந்திய நண்பர் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால் வவுனியா இராணுவ முகாமின் வெடிவிபத்தின் பின்புதான் தெரிகின்றது தட்டில் பெரிய பாதிப்பு என்று. புலிப்பினாமிப் பணம் இவரின் வைத்திய செலவுக்காகவாவது உதவட்டும். பாவம்!WHY-GO.

    Reply
  • thurai
    thurai

    அடுத்து விமானமொன்று தென்னிலங்கையில் விழுந்து நொருங்கும் அதுவரை பொறுத்திரும் வை கோவே.

    துரை

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி,
    முன்பு இராமதாசின் தொலைக்காட்சியும், பத்திரிகையும் புலிகளின் பணத்திலேயே ஆரம்பிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. அவை உண்மை என்பதற்கு ஆதாரமாக தற்போது பத்திரிகையை இழுத்து மூடிவிட்டார்கள். தற்போது தொலைக்காட்சியும் இன்றோ நாளையோ என்ற நிலையிலேயே சேடம் இழுத்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதிலிருந்தே புலிகளுக்கு வக்காலத்து வாங்கிய தமிழக அரசியல்வாதிகள் எதற்காக வக்காலத்து வாங்கினார்கள் என்ற உண்மை தெளிவாகின்றதல்லவா…..

    Reply
  • Vannikumaran
    Vannikumaran

    அட வைக்கோல் வை கோ இலங்கைத்தமிழர் என்ன இந்திய தமிழர் போல் சுயஉணர்வு இல்லாத மந்தைகளா? நீர் தொடர்ந்தும் ஏய்ப்பதற்கு. உம் பித்தலாட்டம் பிதற்றல் எல்லாவற்றையும் தன்னினம் அழிவது கண்டும் சற்றேனும் பதறாமல் காசுக்காக தங்கள் வாக்குரிமைகளை கருணாநிதிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் வாரி வழங்கி வன்னியில்மடிந்த ஒருலட்சம் தமிழருக்கு வாய்க்கரிசி போட இந்தியாவை ஆழும் இத்தாலியப்பெண்ணுக்கு ஆதரவழித்த உம் தமிழக மக்களிடம் வைத்துக் கொள். இனியும் வாலாட்ட நினைத்தால் இனி புலிகள் கூட உம்மக் காப்பாத்த மாட்டார்கள். வன்னியில் தமிழர் மடியும் போது என்ன செய்திர்?

    வன்னிக்குமரன்

    Reply
  • Rompa pala nedumarn
    Rompa pala nedumarn

    வை.கோ…காமடி கீமடி பன்னலயே….????

    எம்.எஸ்.

    Reply