தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணச் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் குமுதினி விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக சிங்கள நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமரர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலைச் சம்பவம் குறித்த விசாரணைகளின் முதலாம் பிரதிவாதியான பிரபாகரனது மரணச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ள அவர் நீதிமன்ற கோப்பு பராமரிப்புக்குக் குறித்த மரணச் சான்றிதழ் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் சிலரும்,லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.