யாழ்ப் பாணம் ரயில் நிலையம் புனரமைக்கப்படவுள்ளது. இப்பகுதியில் கண்ணிவெடிகள், மிதி வெடிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுவதால் அவற்றை முற்றாக அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல, யாழ்.ரயில் நிலையத்துக்கு அருகில் சேதமான விடுதிகள், அலுவலகங்கள், பெற்றோலியக் கூட்டுத்தாபன தாங்கிகள் என்பனவும் புனரமைக்கப்படவுள்ளன.