லண்டன் பாதாள ரயில் ஊழியர்கள் 48 மணிநேர வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளதன் காரணமாக பல லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வேலைக்கு செல்வதில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். தினந்தோரும் பாதாள ரயிலை பயன்படுத்தும் 35 லட்சம் பயணிகளின் தேவைக்காக கூடுதலான பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஊதிய உயர்வு, வேலையிடங்கள் குறைப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக வர்த்தகர்களுக்கு பல மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.