இரானில் அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில், அங்கு நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்கான இறுதிக் கூட்டங்களில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
முன்னாள் அதிபர்களில் ஒருவரும், சக்தி மிக்க மதகுருவுமான, அக்பர் ஹஷெமி ரப்சஞ்ஞானி, முன்னெப்போதும் இல்லாத வகையில் தலையிட்டு, அதிபர் மஃமுட் அஹ்மதிநெஜாத் அவர்கள் பொய் சொல்வதாக குற்றஞ்சாட்டி, அவரைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை, அதியுயர் மதத்தலைவர் எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அஃமதிநெஜாத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் சமூக அமைதியீனத்துக்கு வழி செய்யும் என்று ரவ்சஞ்ஞானி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனது பங்குக்கு, அதிபர் அஃமதிநெஜாத் அவர்கள், தனது போட்டி மறுசீரமைப்புவாத வேட்பாளரான, மிர் குசைன் மொசாவி, வாக்குகளை பெறுவதற்காக இரானிய பொருளாதாரம் பிரச்சினையில் இருப்பதாக பொய் பிரச்சாரம் செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.