இலங் கையில் போர் ஓய்ந்தும் கூட அங்கு தமிழர்களின் கஷ்டங்களுக்கு இன்னும் விடிவு பிறக்கவில்லை. அங்கு நிலையான தீர்வு ஏற்பட இந்தியா உதவ வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி, ராஜ்யசபாவில் கோரினார். ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு, கனிமொழி பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
இலங்கை தமிழர்களின் பாடுகள் பற்றி உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இலங்கையில் போர் முடிந்து விட்டது. மக்களின் கஷ்டங்கள் தீரவில்லை. ஏனெனில், அங்கு தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்படுகிறது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் தமிழ் மக்களுக்கு வாழும் உரிமையும் மறுக்கப்பட்டு உள்ளது. அவர்களை சம குடிமக்களாக கருதப்படும் உரிமை மறுக்கப்படுகிறது.
எனவே, இலங்கையில் தற்போது போர் முடிந்துள்ள நிலையில் இந்திய அரசுக்கு பெரும் பங்கு உண்டு. அந்த மக்களை தங்கள் இல்லங்களில் குடிஅமர்த்த செய்வது, பரம்பரை வீடுகளில் வாழ வைப்பது, நிலையான அரசியல் தீர்வு காண்பதில் மத்திய அரசுக்கு பெரும் பொறுப்பு உள்ளது.
chandran.raja
கஷ்ரம் தீரவில்லைத்தான்.வெகுவாகக் குறைந்திருக்கிறது கனிமொழி! லட்சக்கணக்கான மக்கள் விமானகுண்டு வீச்சு செல்லடி அரைபட்டினி முழுப்பட்டினி பங்கர் வாழ்கையில்யிருந்து மீண்டுவந்து மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். யுத்தம் முடிந்து இன்னும் ஒருமாதங்கள் கூட ஆகவில்லை. இந்த நிலையில் எல்லாவற்றையும் முழுமையாக எதிர்பார்பது முட்டாள் தனம்மல்லவா?
தமிழ்மக்களுக்கிருந்த பெரிய முட்டுக்கட்டை நீங்கிவிட்டது.முகாம்மிலிருக்கும் மக்கள் தம்தம் இருப்பிடத்திற்கு திரும்பிசெல்வதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கிடைக்கக்கூடிய தமிழ்மக்களின் உரிமைகள் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இது மகிந்தா ராஜயபக்சா கையிலேயே தங்கியிருக்கிறது. அவர்களின் தீர்வு சிலவேளைகளில் ஏமாற்றத்தையும் கொடுக்கலாம்.எப்படியிருந்தாலும் தமிழ்மக்களின்
ஜனநாயகபோராட்டதிற்கு வழிகிடைத்திருக்கிறது. கடைசிக்காலத்தில் உங்கள் தகப்பனார் எடுத்தமுடிவுகள் மத்தியஅரசோடு நடந்து கொண்ட விதங்கள் ஈழத்தமிழருக்கு நன்மையே பயிற்றுவிட்டன அதற்காக எமது மனப்பூர்வமான நன்றிகள்.
rohan
//கஷ்ரம் தீரவில்லைத்தான்.வெகுவாகக் குறைந்திருக்கிறது கனிமொழி! யுத்தம் முடிந்து இன்னும் ஒருமாதங்கள் கூட ஆகவில்லை. இந்த நிலையில் எல்லாவற்றையும் முழுமையாக எதிர்பார்பது முட்டாள் தனம்மல்லவா?
முகாம்மிலிருக்கும் மக்கள் தம்தம் இருப்பிடத்திற்கு திரும்பிசெல்வதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. //
மூதூர் மக்களின் இந்தப் போக நெல் விளைச்சல் எல்லாம் எப்படி?
BC
Chandran raja , கனிமொழி தெரிந்து கொள்ள வேண்டியதை சரியாக தெரியப்படுத்தியுள்ளீர்கள்.
thurai
கஸ்ரப்படுபவர்கள் நல்வாழ்வு வாழ வழியுண்டு. காலம் வரும் காத்திருப்போம். தமிழ் மொழியின் பெயரால் அரசியல் வேரூன்றி தமிழகததின் அழியா விருட்சமாக மாறிவிட்ட பரம்பரை அரசியல் ஈழத்தமிழரிடம் ஒருபோதும் உருவாகாது.
துரை