ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராச்சியத்தின் வெளிநாட்டமைச்சர் ஷெய்க் அப்துல்லாஹ் பின் ஸெய்யித் அல் நஹியான் எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு இங்கு வருதை தரும் அல் நஹியான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
இவ்விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடவுள்ள அல் நஹியான், மின்வலு, எரிசக்தி அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன மற்றும் சுற்றாடல், இயற்கை வளங்கள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோரையுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.