வருடாந் தம் நடைபெற்று வரும் கண்டி தலதா பெரஹர உற்சவம் எதிர்வரும் ஜுலை மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக ஸ்ரீதலதா மாளிகையின் தகவல் அதிகாரி வொல்வின் லொகுகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜுலை மாதம் 27ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையும் கும்பல் பெரஹரவும்ää ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து 5ஆம் திகதி வரை ரந்தோலி பெரஹரவும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள நான்கு தேவாலயங்களின் நீர்வெட்டு உற்சவத்துடன் பெரஹர நிகழ்வுகள் யாவும் முடிவடையவுள்ளன.
நாட்டிலிருந்து பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் இவ்வருட பெரஹர நிகழ்வுகளைக் கண்டுகளிக்க பெருமளவு பக்தர்கள் கண்டிக்கு விஜயம் செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.