இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்த கெப்டன் அலி எனும் வெளிநாட்டுக் கப்பலுடன் தொடர்புபட்டிருந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் வத்தளைப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐரோப்பிய நாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்தபோது கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கெப்டன் அலி எனும் கப்பல் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இக்கப்பலில் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் மூலமாகவே கைது செய்யப்பட்ட வர்த்தகர் தொடர்பான தகவல்கள் கிடைத்தன. இக்கப்பலில் வெடிபொருட்கள் எதுவும் இருக்கவில்லை. எனினும் இக்கப்பலுடன் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இக்கப்பலில் இருந்து கைது செய்யப்பட்ட அனைவரும் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
rohan
//கெப்டன் அலி எனும் வெளிநாட்டுக் கப்பலுடன் தொடர்புபட்டிருந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் வத்தளைப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். //
அவரை இவர்கள் லட்சாதிபதியாக்கி விட்டு விட்டுவிடுவார்களா அல்லது?
நண்பன்
புலியோடு சேர்ந்தவர்களை இனி எலியாகியாக்கி விடுவார்கள்.
rony
“கேப்டன் அலி”- என்று கப்பலுக்கு பெயர் வைத்ததை விட, “கேப்டன் விஜயகாந்” எனப்பெயர் வைத்து இலங்கைக்கு அனுப்பியிருந்தால், கேப்டன் கடற்படையை எதிர்த்து அடித்து சமாளித்து வென்றிருப்பார். இதுகூட தெரியவில்லையா இந்த கப்பலை அனுப்பிய மரமண்டைகளுக்கு? மானம் விமானத்தில் ஏறிய கதையைக் கேள்விப்பட்டுள்ளோம். புலம் பெயர் தமிழனின் மானம் கப்பலேறியதை இப்போதுதான் பார்க்கின்றோம். இதற்காக உடனடியாக ஒரு ஆர்ப்பாட்டம் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட வேண்டியது மிக அவசியமாகும். “தமிழரின் கப்பல் தரமான நக்கல்”.
மாயா
மானம் கப்பலேறியது என்று சொல்வதற்கு விளக்கம் புரியாமல் இருந்தேன். இப்போது விளக்கம் நல்லாவே புரிகிறது. அன்று உணர்ந்த மாமனிதர் யாரோ?
வணங்காமண் வணங்காமலே திரும்புகிறது?
palli.
ஜயோ இந்த மனுஸன் சிவாஜிலிங்கம் கப்பலிலை போயிருந்தால் கத்தி பேசி காரியத்தை முடித்திருக்கலாம்; அதுசரி சிங்கத்தின் பார்வை டாக்குத்தர் பகுதி மேலேயும் விழுந்து விட்டதாக செய்திகள் அடிபடுகுது; ஆன்டவன்(லண்டன்) ஆழ்பவனுக்கு (இலங்கை)பச்சைகொடி காட்டி விட்டதாம்; புலி மனமோ மணமோ இருந்தால் யாராக இருந்தாலும் தாராளமாய் கூட்டி சென்று விசாரிக்கலாம், தாம் கண்கலங்க மாட்டோம் என உத்தரவாதம் கொடுத்து விட்டதாக அமான்னின் சீடனும் தற்கால எதிரியுமான நம்ம குழந்தை தேனிலவுக்காக ஒருவார விடுப்பில் ஜரோப்பா வந்த (ஒருவாரத்துக்கு முன்) போது சொல்லி சிரித்தாராம் தான் அழபோவது தெரியாமல்;அதே போல் திரும்பி வரும் கப்பலுக்கு லண்டன் துறைமுகத்துக்கு வரவும் அங்கு தங்கவும்; காலம் தாண்டிய பொருள்களை எரிக்கவும் பல ஆயிரங்கள் தேவைபடுமாம்; இதையும் வர்த்தகர்கள் தலையில் கட்ட இடைகாடு ஓடி திரிவதாக உறுதிபடுத்தபடாத செய்தி சொல்கிறது:
பார்த்திபன்
//வணங்காமண் வணங்காமலே திரும்புகிறது? – மாயா//
ஒரு சின்னத் திருத்தம். “வணங்காமண் தலைகுனிந்து திரும்புகிறது”.