பிரான்சின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற கிராண்ட ஸ்லாம் போட்டியான பிரான்ஸ் பகிரங்க டெனிஸ் சம்பியன் போட்டியில் டெனிஸ் உலகில் மன்னனாகத் திகழ்ந்த சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் ரொபின் சொடர்லிங்கை நேர்செட் கணக்கில் தோற்கடித்து சம்பியன் பட்டத்தை முதற்தடவையாக கைப்பற்றியுள்ளார்.
பெடரர் கைப்பற்றியுள்ள கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களின் எண்ணிக்கை இந்த வெற்றியுடன் 14 ஆக உயர்ந்துள்ளதுடன் இதன் மூலம் இவர் பீட் சாம்ப்ராஸின் சாதனையை சமப்படுத்தியுள்ளார்.
நான்கு கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களையும் வென்ற வீரர் என்ற வரிசையில் பெடரர் ஆறாவது இடத்தை வகிக்கின்றார். ஒரு மணித்தியாலமும் 55 நிமிடங்களும் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 27 வயதுடைய பெடரர் சுவீடனின் சொடர்லிங்கை 6-1 7-6 6-4 என்ற செட்கணக்கில் தோற்கடித்தார்.
anpu
பெடரர் களத்தில் நிலை ததும்பாத நன்நடத்தையுடைய எலலோராலும் நன்கு விரும்பப்படுகின்ற ஒரு விளையாட்டு வீரர்.சம்பிராஸ்ம் இதேபோன்றவர். பெடரர் பிரெஞ்சு ரெனிஸ்ல் வென்றமைக்கு வாழ்த்துக்கள். வரப்போகும் விம்பிள்டன் ரெனிஸிலிலும் ஆறாவது தடவையாக வெற்றிவாகை சூடவேண்டுமென வாழ்த்துகிறேன்.