இலங் கையின் 32ஆவது பிரதம நீதியரசராக அசோக்க டீ சில்வா இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இது தொடர்பான வைபவம் இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
சட்டத்துறையில் 37 வருடகாலம் சேவையாற்றியுள்ள புதிய பிரதம நீதியரசர் இத்துறையில் பல்வேறு உயர் பதவிகளையும் வகித்துள்ளார். சட்டமா அதிபர் திணைக்களத்தில்; 1972ஆம் ஆண்டு அரச சட்டத்தரணியாக சேர்ந்துகொண்ட இவர் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்தார். பின்னர் 1992ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமனம் பெற்றார். இதனை அடுத்து உயர் நீதிமன்ற நீதியரசர் என்ற நியமனமும் இவருக்கு கிடைத்தது. இவர் நீதியரசராகக் கடமையாற்றியபோது யுத்தக் குற்றங்களை விசாரணை செய்யும் சர்வதேச நீதிமன்றத்திலும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.