யாழ்ப் பாணத்துக்கு ஏ-9 வீதியூடாக எதிர்வரும் வியாழக்கிழமை 120 லொறிகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக யாழ். வர்த்தகர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பிலிருந்து எதிர்வரும் வியாழக்கிழமை யாழ். வர்த்தகர்களின் 120 லொறிகளில் வடபகுதிக்கு பொருட்கள் கொண்டுசெல்லப்படவுள்ளன.
இந்தப் பொருட்கள் அனைத்தும் அநுராதபுரத்தில் சோதனைக்குட்படுத்தப்பட்டு பாதுகாப்புப் பிரிவினரால் லொறிகளில் முத்திரை இடப்படும். மீண்டும் முகமாலையில் லொறிகள் பரிசோதிக்கப்பட்டதன் பின்னர் இந்த முத்திரைகள் அகற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது