இன்று புனித பொசன் தினமாகும். மஹிந்த தேரர் இலங்கையில் பெளத்த மதத்தை அறிமுகப்படுத்திய நிகழ்வு இன்றைய தினத்திலேயே இடம்பெற்றது.
இதனை நினைவுகூரும் பொசன் பண்டிகையை முன் னிட்டு லேக் ஹவுஸ் நிறுவ னம், மிஹிந்தலையில் 47வது தடவையாகவும் ஆலோக பூஜை (மின்னொளி ஏற்றல் பூசை) நடத்துகின்றது.
இந்தப் பூஜை நேற்று சனிக்கிழமை ஆறாந் திகதி முதல் திங்கட்கிழமை எட்டாந் திகதி வரை நடை பெறுகின்றது. இன்றைய தினம் இந்து ஆலயங்களில் வைகாசிப் பெளர்ணமி விசேடபூஜைகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.