ஜெர் மனியின் ட்ரெஸ்டன் நகரில், ஜேர்மனிய தலைவி ஆங்கெலா மெர்கெல் அவர்களைச் சந்தித்து உரையாடிய அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள், பூகென்வால்ட் நகரில் முன்னாள் நாஜி சித்திரவதை முகாமுக்கு விஜயம் செய்துள்ளார்.
கெய்ரோவில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உரையை ஆற்றிய மறுதினம், கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அதிபர் ஒபாமா, மத்திய கிழக்கில் அமைதியை எட்டுவதற்கான தருணம் இது என்று கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது அமெரிக்கா சமாதானத்தை திணிக்காது என்கின்ற போதிலும், அவர்கள் பேச்சை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையை அது ஏற்படுத்தும் என்று ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவுக்கும், ஜேர்மனிக்கும் இடையிலான உறவுகள் குறித்துப் பேசிய அவர், உலக விவகாரங்கள் குறித்து தொடர்ச்சியான பல விடயங்கள் கையாளப்பட வேண்டிய நிலையில் ஜேர்மனி தமது முக்கிய கூட்டாளி என்று குறிப்பிட்டார்.