வட மாகாணத்திலுள்ள மாதிரிக் கிராமங்களில் வாழும் மக்களுக்காக வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள இந்த வீடமைப்புத் திட்டங்களை முன்னிட்டு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக் காரியாலயங்களில் உள்ள அலுவலர்களிடமிருந்தும் இதற்கான ஒத்துழைப்புக்கள் பெறப்படவுள்;ளன.
இதுதவிர முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள அலுவலர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதோடு வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சின் பணிப்புரைக்கமைய இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.