மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் வீட்டிற்குள் நேற்று நண்பகல் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் பணம், நகை உட்பட சுமார் 15 லட்சம் பெறுமதியான உடைமைகள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளன. அரசாங்க அதிபர் தனது கடமையின் நிமித்தம் மாவட்ட செயலக அலுவலகத்தில் இருந்தவேளை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உப்போடையிலுள்ள அவரது இல்லத்திற்குள் நுழைந்த குறிப்பிட்ட ஆயததாரிகள் தங்களை அடையாளம் காண முடியாதவாறு ஹெல்மெட்டினால் முகத்தை மறைத்திருந்ததாகவும், கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஆகியன வைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
குறிப்பிட்ட ஆயுததாரிகள் வீட்டிற்குள் நுழைந்து அவரது மனைவி,மற்றும் விருந்தினராக வந்திருந்த உறவினர்கள் உட்பட அங்கிருந்தவர்களை மிரட்டி அறையொன்றினுள் வைத்துப் பூட்டி விட்டு அவர்கள் அணிந்திருந்த நகைகளையும் வைத்திருந்த ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
palli
திருடன் வீட்டிலேயே திருடனா??
இவர் பகலில் அதிகார பூர்வமாக திருடுவதை ஆயுத அதாரிகள் பட்டபகலில் திருடி விட்டார்களாம்;