ஐ.சி.சி. 20 க்கு 20 கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து சென்றுள்ள, இலங்கை கிரிக்கெட் அணியை நாட்டிற்கு திருப்பி அனுப்புமாறு கோரியும், ஏனைய நாடுகள் போட்டியை பகிஷ்கரிக்க கோரியும் லண்டன் வெலிங்டன் வீதியில் லண்டன் வாழ் தமிழர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். நாளை 5ஆம் திகதி லண்டனில் இடம்பெறவுள்ள ஐ.சி.சி. இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்வதற்காக இலங்கை அணி அங்கு சென்றுள்ளது. இதன்போது நேற்று புதன்கிழமை இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கைகளில் பாதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமடைந்துள்ளதனால் உலக அரங்கில் இலங்கை கிரிக்கெட் அணி புறக்கணிக்கப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியிருந்தனர்.
தென் ஆபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியின் போது மைதானத்திற்கு வெளியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத நாடொன்றை பிரதிநிதித்துவப்படுத்தி கிரிக்கெட் அணி உலக நாடுகளுடன் போட்டியிடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாதென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டு சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிகளை பிரித்தானியா புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. போட்டிகள் நடைபெறும் தினங்களில் மைதானங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடைபெறக்கூடிய சாத்தியம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது
thollar sri
ஆடு நனையுதென்று ஓநாய்கள் அழுததாம்……. புலிகள் செய்த மனித உரிமை மீறலை எந்த லிஸ்டில் சேர்ப்பது?? சிறீலங்கா மனித உரிமை மீறல் செய்யவில்லை என்று நான் கூறவில்லை…. அதை கண்டிக்கும் உரிமை இந்தப் புலன்பெயர்ந்தவர்களுக்கு இலிலை…. விளையாட்டை விளையாட்டாகப் பார்ப்போம்.
palli
இது என்ன விபரீதம்? அவர்கள் விளையாட்டு வீரர்கள் ராணுவ வீரர்கள் அல்ல; பாகிஸ்தானும் இந்தியாவும் கூட விளையாட்டில் தமது எதிர்ப்பை காட்டுவதில்லை; அதை விட மகிந்தா அரசுக்கு ஆதரவாயும் பலமாகவும் ஒரு முரளிதரன் அமைச்சராய் இருந்து செயல்படுவது போல் இந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு நம்ம முரளிதரன் சிறப்பான போலராக இருந்து கலக்குகிறார்; அதுவும் சரிதான் எமக்குதான் தலைவரை தவிர வேறு எந்த தமிழர் பேரும் பேசபடகூடாது என இத்துபோன ஈழம்மீது சத்தியம் செய்து விட்டோமே; தமிழர் எதுக்கெல்லாம் ஆர்பாட்டம் செய்வார்களோ தெரியவில்லை; நினைத்தால் சிரிப்பாக இருக்கு; பார்த்தால் வெக்கமாக இருகாதா??
பார்த்திபன்
//ஐ.சி.சி. 20 க்கு 20 கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து சென்றுள்ள, இலங்கை கிரிக்கெட் அணியை நாட்டிற்கு திருப்பி அனுப்புமாறு கோரியும், ஏனைய நாடுகள் போட்டியை பகிஷ்கரிக்க கோரியும் லண்டன் வெலிங்டன் வீதியில் லண்டன் வாழ் தமிழர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். //
அடடா, அப்புறம் அவங்க பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு ஓடி விட்டாங்களா?? போங்கையா நீங்களும் உங்க ஆர்ப்பாட்டங்களும். போய் ஏதாவது ஆக்க பூர்வமாய் செய்யப் பாருங்கள். எனியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் நடந்து அனைத்துத் தமிழர்களின் பெயர்களையும் கெடுக்காதீர்கள்.
msri
ஆர்ப்பாட்டக்காரர்களில் தப்பில்லை!>தமிழ்த்தேசியம் கடந்தகாலங்களில் எப்போராட்டத்தை அர்த்தத்துடன் செய்தது! சிங்கள அரசை> சிங்கள ஏகாதிபத்தியம் என்பர்!சிங்கள முன்லீம் மக்களை எதிரியென்று அவர்களைக் கொல்வார்கள்! நண்பனை எதிரியாக்குவார்கள! எதிரயை நண்பன் என்பர்! அப்போ இவர்களிடம் அரசியல் கற்ற புலம்பெயர்வுகள் என்ன செய்யும்!