வடக்கில் மீன்பிடித்துறையை மேம்படுத்த 180 மற்றும் 200 நாட்கள் கொண்ட விசேட வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக மீன்பிடி, நீரியல்வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் கீழ் மீன்பிடி, நீரியல்வளத்துறை அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள திட்டத்தின் கீழேயே இந்த விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பவுள்ளது. வட மாகாணத்தில் 219 மீனவக் கிராமங்களில் இருந்து 15000 மெற்றிக் தொண்னையும் விடக் கூடுதலான மீன்கள் பெறப்பட்டுள்ளது.
‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் கீழ் கடற்றொழில்துறையை அபிவிருத்தி செய்வதற்கு பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்கள் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.