சரண டைந்த விடுதலைப் புலி உறுபினர்கள் சமூகத்தில் இயல்பு வாழ்வை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது தங்கியுள்ள சம்பந்தன் நிருபர்கள் மத்தியில் பேசும் போது இதனைத் தெரிவித்ததாக ஏ.என்.ஐ. செய்திச் சேவை தெரிவித்தது.
யுத்தம் முடிவுக்கு வந்துள்ள சூழ்நிலையில் அவர்களின் நியாய பூர்வமான உரிமைகள் தொடர்பாகத் தீவிரமாகப் பரிசீலனை செய்யப்படவேண்டும். சாதாரணமாக எந்தவொரு சூழ்நிலையிலும் அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புவதற்குரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் சம்பந்தன் கூறியுள்ளார்.
msri
இத பழக்கதோசம்! மக்கள்பற்றியும் சிந்தியுங்கள்! புலி+கலைஞர்+இந்திய மாயைகளில் இருந்து விடுபடுங்கள்!
chandran.raja
எந்த கொல்லைக்குள் ஓடித்திரிந்து ஒளிந்து விளையாடினீர்கள்? அரசாங்கத்தை கேட்பதற்கு முதல் தமிழ்மக்களைப் பார்த்து கேள்ளுங்கள் எங்களையெல்லாம் மன்னிப்பீர்களா என்று. ஒரு சின்னத் தவறைத்தன்னும் சுட்டிக்காட்டிக் கேட்டிருப்பீகளா? உங்களில் ஒருவருக்காவது துணிவாவது இருந்ததா?
தோல்வி உறுதியென தெரிந்தும் கடைசிமணத்தியாலங்கள் வரை ஏழைப்பிள்ளைகளை குண்டைக்கட்டி தற்கொலை தாக்குதலுக்கு அனுப்பி இறுதியில் கோளைத்தனமான முறையில் தலைமைகள் உயிர் இழக்கும் வரை உங்கள் “சுகபோகம்” கொழும்பைத்தானே சுற்றிக்கொண்டிருந்தது. இப்படியெல்லாம் காலங்களை தவறவிட்டு இனிஏதாவது செய்யப் போகிறோம் என்று சொல்லவும் தமிழ்மக்கள் கேட்கவும் அவ்வளவு முட்டாள்சமூகமா? இந்த தமிழ்சமூகம்.
நண்பன்
புலிகளேன்றால் சரணடையாங்கள். சயநைட்டில்ல அடிப்பாங்க. சும்மா…பகிடி விடுறீங்க. சம்பந்தர் ச்சும்மாதானே?