“பாடசா லைகளில் டெங்கு ஒழிப்பு வாரம்” ஒன்றை கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த பிரகடனப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை “பாடசாலைகள் டெங்கு ஒழிப்பு வாரம்” அனுஷ்டிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். டெங்குக் காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதால் டெங்கு ஒழிப்பு தொடர்பான வேலைத் திட்டங்களையும், விழிப்புணர்வுகளையும் வேகமாக முன்னெடுக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே அமைச்சர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
டெங்கு ஒழிப்பு வாரத்தினுள் சகல பாடசாலைகளிலும் அதன் சுற்றுப் புறச் சூழல்களில் டெங்கு ஒழிப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பாடசாலை மாண வர்களைக் கொண்டே டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைகளை செய்யுமாறும் அமைச்சர் சகல மாகாண, வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு மேலதிகமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தினங்களிலும் காலை 7.30 மணி முதல் 8.00 மணிவரை பாடசாலை சுற்றுப்புற சூழலில் டெங்கு ஒழிப்பு முன்னேற்பாடுகளை செய்யுமாறும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சகல பாடசாலை அதிபர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்