அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தீகவாவியை அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீடமைப்புத் திட்ட வீடுகளை புதிதாக விண்ணப்பங்கள் கோரி சட்டத்தின் கீழ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அம்பாறை அரசாங்க அதிபர் உட்பட பிரதிவாதிகளுக்கு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என சவுதி அரசாங்கத்தின் உதவியுடன் தீகவாவியை அண்மித்த பகுதியில் 500 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ் வீடுகள் முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவிருந்த வேளையில் பௌத்த அமைப்புகளினால் அந்நேரம் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டது.
ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான எல்லாவெல மேத்தானந்த தேரோ இது தொடர்பாக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அம்பாறை அரசாங்க அதிபர், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ,வீடமைப்பு அமைச்சர் பேரியல் அஷ்ரப் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட இம்மனு மீதான தீர்ப்பை நேற்று பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான நீதியரசர்கள் வழங்கினர்.
தீகவாவியை அண்மித்த பகுதியில் சமயத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை குடியேற்றும் எண்ணத்துடன் 500 சுனாமி வீடுகளை பகிர்ந்தளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அந்த தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
சட்டம் பிள்ளை
யுத்தம் முடிந்த பின் முஸ்லிங்களுக்கு விழுந்த முதல் இடி…
நண்பன்
// சட்டம் பிள்ளை on June 2, 2009 4:05 pm யுத்தம் முடிந்த பின் முஸ்லிங்களுக்கு விழுந்த முதல் இடி…//
நாட்டின் ஐக்கியம் பேண இதுதான் முதல் அடி. அனைவருக்கும் கலந்து வீடுகள் வழங்கப்பட வேண்டும். இனி எந்த இனமும் நாட்டில் தனித்து ஒரு பகுதியில் வாழ இடம் கொடுக்கக் கூடாது.
rohan
//நாட்டின் ஐக்கியம் பேண இதுதான் முதல் அடி. அனைவருக்கும் கலந்து வீடுகள் வழங்கப்பட வேண்டும்//
இதை யாராவது துணிந்துநின்று சொந்தப் பெயரில் தமிழர் முன்னால் சொல்ல முடியுமா?
இறக்குவானையிலும் வட்டவளையிலும் ட்கமிழ் கெஓயில்கள் அடி வாங்கியிருக்கின்றன.
குடும்பிமலையில் (தொப்பிகல என்று சொன்னால் தான் சிலருக்கு விளங்குமோ என்னவோ) புத்தர் மட்டும் தானே கோயில் கொள்ள உரிமை உள்ளவராயிருக்கிறார்!
Sooriasegaram, Mylvaganam
well done keep it up……..
i,m very happy
long live our motherland.