தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த காலஞ்சென்ற அன்ரன் பாலசிங்கத்தின் மனைவியான அடெல் பாலசிங்கத்தைக் கைது செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அடெல் ஒரு மருத்துவ தாதியாவார். அன்டன் பலசிங்கம் லண்டனில் இருந்த போது, அவரைச் சந்தித்த அடெல் பின்னர் அவரைத் திருமணம் செய்து கொண்டார்.
அண்மைக்காலமாக பிரிட்டனின் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் முக்கிய பிரதேசங்களில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அடெல் பாலசிங்கம் செயற்பட்டதாக புலனாய்வுத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறுவர் போராளிகளை இணைத்தமை, புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பணிகளை மேற்கொண்டமை போன்ற பணிகளில் அடெல் பாலசிங்கம் ஈடுபட்டிருந்ததாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதனால், அடெல் பாலசிங்கத்தைக் கைது செய்ய வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அடெல் பாலசிங்கம், இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக செயற்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
BC
ஒரு வெள்ளை பெண் மனித உரிமை கதைக்கும் நாட்டை சேர்ந்தவர் நஞ்சு குப்பிகளை இலங்கை பெண்கள் கழுத்தில் கட்டுவாரா? ஆனால் எங்கள் நாட்டில் நடந்துள்ளதுதே!
KUNALAN
அன்ரியைப் பாதுகாக்க ஒரு அவசரப் படையொன்றை கனடா தேடகம் உடனே கட்டுவார்கள். யாரும் பயப்பிட வேண்டாம்.
குணாளன்
பார்த்திபன்
வன்னிப் பதுங்கு குளிகளின் அமைப்பெல்லாம் அன்ரிக்கு அத்துப்படி. அதாலே அப்படி ஒரு பதுங்குகுளி பிரித்தானியாவிலே ஒரு ஒதுக்குப் புறத்திலே அமைத்து விட்டால் போச்சு. ஆகத் தலை போற நிலைமை வந்தால் முன்பு சிறுசுகளுக்கு மாட்டி விட்ட சயனைட் குப்பி சாம்பிளுக்கு எடுத்த வந்திருப்பா தானே. அது கைகொடுக்கும். அதுவும் விரும்பவில்லை என்றால் புலித்தலைமைகள் இறுதி நேரத்தில் செய்தது போல் சரணம் இருக்கவே இருக்கிறது.
KUNALAN
//ஆகத் தலை போற நிலைமை வந்தால் முன்பு சிறுசுகளுக்கு மாட்டி விட்ட சயனைட் குப்பி சாம்பிளுக்கு எடுத்த வந்திருப்பா தானே.//பார்த்திபன்.
அதெல்லாம் ஏழை பரதேசிகளின் பிள்ளைகளுக்கல்லோ?!
தனது உயிரில் மட்டுமே அதீத ஆசையுள்ள தலையின் பக்கபலமாயிருந்தோரும் அப்படித்தான்.
குணாளன்
நண்பன்
//பார்த்திபன் on June 2, 2009 2:16 pm வன்னிப் பதுங்கு குளிகளின் அமைப்பெல்லாம் அன்ரிக்கு அத்துப்படி. அதாலே அப்படி ஒரு பதுங்குகுளி பிரித்தானியாவிலே ஒரு ஒதுக்குப் புறத்திலே அமைத்து விட்டால் போச்சு. ஆகத் தலை போற நிலைமை வந்தால் முன்பு சிறுசுகளுக்கு மாட்டி விட்ட சயனைட் குப்பி சாம்பிளுக்கு எடுத்த வந்திருப்பா தானே. அது கைகொடுக்கும். அதுவும் விரும்பவில்லை என்றால் புலித்தலைமைகள் இறுதி நேரத்தில் செய்தது போல் சரணம் இருக்கவே இருக்கிறது. //
பிரபாகரன் ஒரு கோழை
அவனை வீரனாக்கியது ஒரு கைத்துப்பாக்கி.
கோயிலுக்கு சாமி கும்புடுற நோக்கோடு போன துரையப்பாவை
பின்னால போய் சுட்டது.
எப்பவும் ஓடி ஒழிஞ்சு திரிஞ்ச பிரபாகரனை
யாராவது இறுக்கி விரட்டியிருந்தா
அண்டைக்கே இவ்வளவு சனம் செத்திருக்காது.
தன் உயிருக்கு பயந்து தூக்கின சயனைட்டை வச்சே
பிலம் காட்டினதை நம்பி
பலோவரா செத்ததுகள் பல ஆயிரம்.
அதை சப்போட் பண்ணியது ஆண்டி.
கடைசியில எல்லாருக்கும் முன்னால
வெள்ளைப் புறாவோட தலைவரே போய்
எலிப் பொறியில புலிகளோட விழுந்த பின்ன
ஆண்டி மட்டும் வெள்ளை கொடி பிடியாளோ?
ஆண்டி அப்ரூவரா மாறினாலும் மாறுவா?
ஆண்டன் சொன்ன மீதியை சொன்னாலும் சொல்லுவா?
பெற்றோல் டின்னோடு
திரிஞ்ச தலைவர்
இப்படிச் சாகாமல்
சீதா காவியம் படைக்கயில்லையென்று
புலிவாலுகளுக்கு வெக்கம்?
தலைகாட்டேலாமல்
மனுசி விட்டு போனது போல சோகத்தில திரியுதுகள். தமிழ்நாட்டு தலைகளும் முழுசிக் கொண்டு திரியினமாம்.