‘ஸ்லம்டாக்’ குழந்தை நட்சத்திரங்களுக்கு புதிய வீடு

azhar_rubina.jpgஆஸ்கர் விருதை வென்ற‘ஸ்லம்டாக் மில்லியனர்’திரைப்படத்தில் நடித்த இரு இந்திய குழந்தை நட்சத்திரங்களுக்கு புதிய வீடுகளை கொடுக்க அரசாங்கம் முன் வந்துள்ளது. மும்பையில் இந்த மாதத்தின் முற்பகுதியில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளால் இவர்கள் இருவருடைய வீடும் இடிக்கப்பட்டது.

அசாரூதின் இஸ்மாயில் மற்றும் ரூபினா அலி என்ற இந்த இருவருக்கும் காங்கிரஸ் கட்சி வீடு கொடுக்க முன்வந்துள்ளது. இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடித்தமைக்காக இவர்களுக்கு வீட்டை விருதாக கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இந்த வீட்டுக்கு ஆகும் செலவை காங்கிரஸ் கட்சி ஏற்று கொண்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    குடிசை மாற்று வாரிய அதிகாரிகளால் இடிக்கப்பட்டது இவர்களது வீடுகள் மட்டுமல்ல ஏனைய சேரிக் குழந்தைகளின் வீடுகளும். ‘ஸ்லம்டாக் மில்லியனர்’திரைப்படத்தில் நடித்ததால் இவர்களுக்கு நிறையப் பணமும் பரிசுகளும் கிடைத்தன. அதனால் இவர்களால் வேறு வீட்டை அமைத்திருக்க முடியும். ஆனால் ஏனைய அந்தச் சேரிக் குழந்தைகளால்?? உண்மையில் மாற்று வீட்டை அந்தக் குழந்தைகளுக்கும் காங்கிரஸ் கட்சி வழங்க முன்வர வேண்டும். அதை விடுத்து இவர்களுக்கு மட்டும் வீடுகளை வழங்க காங்கிரஸ் கட்சி முன்வருவது வெறும் பிரச்சார விளம்பரம் தான்.

    Reply