வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுடன் புலிகளின் ஆயுதப் படையில் இருந்த 200 சிறுவர்கள் வவுனியா முகாம்களில் தங்கி உள்ளதாக ஐ.நா வின் யுனிசெப் நிறுவன இலங்கைப் பிரதிநிதி பிலிப் தெரிவித்துள்ளார்.
அவர்களில் 59 பேர் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
accu
ஒரு பாவமும் அறியாத இந்தக் குழந்தைகள் எந்தவித துன்பங்களையும் அனுபவிக்கக்கூடாது. இவர்களின் நலனுக்காக சம்பந்தப்பட்டோர் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
rohan
புலி சொன்னது போல பாதிக்கப் பட்ட அனாதைச் சிறுவர்களோ அல்லது பலர் சொன்னது போல பலவந்தமாகச் அவசரப் பயிற்சிக்காக போனவர்களோ, செஞ்சோலை சிறுசுகள் சிதறடிக்கப்பட்டன என்பதும் உண்மை தானே.
பார்த்திபன்
றோகன்,
செஞ்சோலையில் முதலுதவிப் பயிற்சி என்ற போர்வையில், பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப்பயிற்சி நடைபெற்றபோது சிதறடிக்கப்பபட்டார்கள் என்பதை நானும் ஒத்துக் கொள்கின்றேன்.
rohan
அந்த சிதறடித்தல் எவ்வகையில் சரி? புலி ஆதரவாளர் என்று அடையாளம் காணப்படாதோர் எத்தனை அக் குற்றத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தோம்?
thevi
இன்ன இடத்தில் பயிற்சி கொடுக்கிறோம் என புதினத்தில் படங்களுடன் செய்தி வெளியிட்டு சிறுவர்களை காட்டிக் கொடுத்து விமானப் படையை கூப்பிட்டு அடிப்பித்து அதை படமெடுத்து வியாபாரம் செய்தவர்களை யார் கண்டித்தார்கள்? யார் குரல் கொடுத்தார்கள்?