இலங்கை திரும்ப விருப்பம் தெரிவிக்கும் அகதிகள் விவரத்தை பொலிஸார் சேகரித்து வருகின்றனர். இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரினால் அங்கிருந்த மக்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர். இவர்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போர் முடிவுக்கு வந்ததையடுத்து, இங்குள்ள அகதிகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பும் அகதிகள் பட்டியலை பொலிஸார் தயாரித்து வருகின்றனர். உயிர், உடைமைக்கு பாதுகாப்பு இருக்கும் நிலையில் இலங்கை செல்ல இவர்கள் விருப்பம் தெரிவித்ததாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்
ramesh
1987ல் இலங்கை இந்திய (ஜே.ஆர்-ராஜீவ்) ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அமைதிப்படையும், ஐ.நா.வின் அகதிகளுக்கான யு.என்.எச்.சி.ஆர்,
அமைப்பும் இலங்கையில் இருக்கும் போதுதான், மன்னார் அரசாங்க அதிபர் திரு.மக்பூல் அவர்கள் ஆயுததாரிகளால் 11.01.1988 ல் மன்னாரில் தாராபுரம் எனும் கிராமத்தில் கொல்லப்பட்டார் என்பதையும் இந்திய அரசு மறந்து விடலாகாது. ஆக்கப்பொறுத்தவர்கள் ஏன் ஆறப்பொறுக்கக்கூடாது?
பார்த்திபன்
இந்திய மத்திய அரசு இலங்கை தமிழர்கள் விடயத்தில் அவசரம் காட்டாது, முதலில் இலங்கையில் ஒரு சுமூக சூழ்நிலையை உருவாக்கி, இலங்கைத் தமிழர்கள் தாமாக திரும்பும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.
பார்த்திபன்
இந்திய மத்திய அரசு இலங்கைத் தமிழர்களை திருப்பியனுப்புவதில் அவசரம் காட்டாமல், முதலில் இலங்கையில் ஒரு சுமூகமான நிலையை உருவாக்க உதவி, அதன் மூலம் அம்மக்கள் தாமாக விரும்பித் திரும்பிப் போகும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.