யூ.என்.எச்.சீ. ஆர். தலைவருடன் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில் நேற்று சந்திப்பு

mahinda-samarasinha.jpgஇடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள், நிவாரணங்கள் வழங்குவதில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் (யூ. என். எச். சீ. ஆர்.) ஆற்றும் பங்களிப்பை மேலும் பலமடையச் செய்யும் வகையில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அதன் தலைவருடன் விசேட சந்திப்பொன்றை நடத்தினார்.

ஜெனீவாவில் இந்தச் சந்திப்பு இடம் பெற்றது.  அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகராலய தலைவர் அன்டோனியோ குட்டேரஸை (Antonio Guterres) அவரது அலுவலகத்தில் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க சந்தித்து பேச்சு நடத்தினார்.

தற்போது யூ. என். எச். சீ. ஆர். தொண்டு நிறுவனம் அகதிகளுக்கான தங்குமிட வசதிகள் உட்பட இடம் பெயர்ந்துள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறித்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கையின் சார்பில் தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டதும் அரசு முன்னெடுக்கவுள்ள வடக்கு வசந்தம் திட்டத்தின் ஊடாக மக்களை உனடியாக சொந்த இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறித்தும் பேச்சுவார்த்தையின் போது தெரிவித்தார்.

இடம் பெயர்ந்துள்ள மக்களை மீளக் குடியமர்த்துவதன் போதும் எவ்வகையிலான பங்களிப்புகளை வழங்கும் என்பது பற்றியும் யூ. என். எச். சீ. ஆர். தலைவர் குட்டேரஸ் அமைச்சருக்கு விளக்கமளித்துள்ளார்.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை விவகாரம் நேற்று முடிவடைந்ததையடுத்து பேரவையின் வழமையான கூட்டத் தொடர் ஜூன் 2 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகிறது. இக் கூட்டத் தொடரில் முதல்வாரம் கலந்து கொண்ட பின்னரே அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து நடைபெறும் கூட்டத் தொடரில் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கலந்து கொள்வார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • ramesh
    ramesh

    1987ல் ஜெனிவாவில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்ததின்படி இந்தியாவிலிருந்து யு.என்.எச்.சி.ஆரால் மீள்குடியேற்றத்திற்காக ஐ.நா.வின் பாதுகாப்பில் அழைத்துவரப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள், புலிகளென முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்பட்டு,கொலை செய்யப்பட்டு, பலர் காணாமல் போய், சிலர் இன்னும் எவ்வித விசாரணைகளுமின்றி சிறைகளில் வாடுகின்றார்கள். ஆனால் அதிகமான அகதி மக்கள் இன்றும் அனாதைகளாக அலைந்து தற்காலிகமாக பல இடங்களில் பெரும் கஸ்டத்தின் மத்தியில் துயரத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த லட்சணத்தில் வன்னியிலிருந்து மறுவாழ்வு தேடி வந்த நமது உறவுகளும் மீண்டும் யு.என். எச். சி.ஆர் கையில் சிக்கி சீரழிய வேண்டுமா?

    Reply