யாழ். மாநகரசபை, வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கான தேர்தலை ஒத்திவைக்கவேண்டும் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா அணி) ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டமைப்பான ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யாழ். மாநகரசபை, வவுனியா நகரசபை ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அரசு அறிவித்துள்ளது. ஜனநாயக சமூகத்தில் தேர்தல்கள் மக்களின் தெரிவு என்பன முக்கியத்துவம் வாய்ந்தவை எனினும் எமது மக்களின் ஒரு பகுதியினர் பெரும் இழப்புக்களைச் சந்தித்து சொல்லொண்ணா அவலத்திற்கு முகம் கொடுத்து முகாம்களிலும் வைத்தியசாலைகளிலும் வாழ்கின்றனர். இவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய ஆசுவாசப்படுத்த வேண்டிய இன பந்துக்களில் கணிசமானோர் தேர்தல் அறிவிக்கப்பட்ட மாநகரசபை பகுதிகளில் வாழ்கின்றார்கள். இவற்றை மனங்கொண்டு சிறிது காலத்திற்கேனும் தேர்தலை ஒத்திவைப்பது அவசியமானதென கருதுகிறோம்.
வடக்கில் வசந்தம் வீசவேண்டும்: ஜனநாயகம் மிளிர வேண்டும் எனினும் யுத்தம் முடிந்த கையோடு தேர்தல் நடைபெறுவது பொருத்தமற்றதென நாம் கருதுகிறோம் தேர்தலை சிறிது காலத்திற்கேனும் ஒத்திவைக்குமாறு அரசை கேட்டுக்கொள்கின்றோம்.
palli
அடேங்கப்பா என்ன கரிசனை
இவரல்லவா தமிழின தலைவன்,
புகழ பல்லிக்கு வார்த்தைகள் இல்லை;
kanapathi
உங்களுக்கு என்னதான் வேண்டும்
பிரபாகரன் வேண்டாம்
டக்ளஸ் வேண்டாம்
சங்கரி வேண்டாம்
ரிஎன்ஏ வேண்டாம்
யார் தான் வேண்டும்? உங்களுக்கு பல்லி.