பாகிஸ்தானின் லாஹூர் நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்றில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரும் மீட்பு பணியாளர்களும் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களையும் காயமடைந்தவர்களையும் அருகிலுள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானின் முக்கிய நகரங்களிலும் வெளியிடங்களிலும் தொடர்ச்சியான குண்டு வெடிப்புக்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுவருவதன் காரணமாக பெருந்தொகையான சிவிலியன்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.