உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், விடுதலைப்புலிகளின் மற்றொரு கிளர்ச்சி ஏதாவது மீண்டும் இடம்பெறுவதை தடுப்பதற்காக மேலும் 1 இலட்சம் படையினரை திரட்டவுள்ளதாக இராணுவத் தரப்பு தெரிவித்திருக்கிறது.
வெளிநாடுகளிலுள்ள புலி உறுப்பினர்கள் புதிய தலைமைத்துவத்தின் கீழ் மீண்டும் முயற்சிப்பர் என்பதால், படையினரை கட்டியெழுப்பவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்ததாக ஏ.பி. செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.
பார்த்திபன்
இந்த 1 இலட்சம் படையினர் சேர்ப்பில் கணிசமான தமிழ் இளைஞர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் இலங்கை அரசினால் முன்மொழியப்பட்ட தேசியம் என்பது கட்டியெழுப்பப்படும். வெறுமனே மீண்டும் சிங்கள இளைஞர்களை மட்டுமே சேர்க்க முயன்றால், மீண்டும் இனத்துவேசம் தான் தலைகாட்டும்.
சாந்தன்
பார்த்திபன், சின்ன திருத்தம்!
இனத்துவேசம் தலைகாட்டுவதனால் தான் சிங்கள இளைஞர்களை மட்டுமே சேர்த்துக்கொள்லுதல் நடக்கும். நீங்கள் சொல்வதுபோல தலைகீழாக அல்ல.
அப்போ ஸ்ரீலங்காவில் 3 லட்சம் ஆமி இருக்கும் என்கிறியள். நல்ல வேலைவாய்ப்பு திட்டம் தான்.
Sooriasegaram, Mylvaganam
Sri Lanka – Population:19,742,439
Sri Lanka – Army:150000(Now)+100000=250000
so 1 Army for 79 People.
well done. keep it up
ramesh
“இத்தனை சிறிய இலங்கைக்கு அத்தனை பெரிய படை எதற்கு”?
பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டு விட்டது உண்மையென்றால்,மேலும் ஒரு லட்சம் இராணுவம் எதற்கு? விவசாயம் செய்யவா? “வெறி குட் ஐடியா” இதுதான் “மகிந்த சிந்தனையோ”?
Sutha
கருணா அணி> டக்ளஸ் படை> பிள்ளையான் குழு என எல்லோரையும் இராணுவத்தில் இணைத்துக்கொள்வார்கள். இவர்கள் ஒன்றும் சிங்கள இராணுவத்துக்குச் சளைத்தவர்கள் இல்லையே. பாவம் தமிழ் மக்கள். முளத்துக்கொரு இரடாணுவ காவலரண்களுக்கு மத்தியில் இனி அவர்களின் வாழ்க்கையும் தொடரும் மரணத்துள் வாழ்வு தான். இதற்குத்தானே நாங்கள் ஆளுக்கொரு பக்கமாகப் பிரிந்துநின்று போராடினோம்.
rohan
இராணுவத்துடன் கடல், வான் படை வீரர்களையும் சேர்த்தால் ஒவ்வொரு 60 பேருக்கு ஒரு படை வீரர் இருப்பார். பொலிஸ், அரசியல் வாதிகளின் பாதுகாவலர்கள் என்று சேர்த்தால் ஒவ்வொரு 50 இலங்கையருக்குள் உத்தியோகபூர்வமாக ஆயுதம் ஏந்தும் ஒருவர் இருப்பார். புல்லரிக்க வைக்கும் எதிர்காலம் எங்கள் சந்த்ததிகளுக்காக காத்திருக்கிறது.
paramu
Dear Sooriasegaram
Sri Lanka North east- Population:18,000,00
Sri Lanka – Army:100000(Now in North East)+100000=200000
so 1 Singalese Army for every 9 tamil speaking people.
So ethnic clensing will be on full swing