உலக சுகாதாரப் பேரவையின் தலைவராக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டமைக்கு நேற்று பாராளுமன்றத்தில் வாழ்த்துக்களும், ஆசிகளும் தெரிவிக்கப்பட்டன.
ஆளும் கட்சியின் சார்பில் அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த வாழ்த்துக்களையும், ஆசிகளையும் சபாநாயகரின் அனுமதியைப் பெற்று சபையில் தெரிவித்தார்.