விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் எனும் வேலாயுதம் தயாநிதி மற்றும் மொழி பெயர்ப்பாளராக செயற்பட்டிருந்த ஜோர்ஜ் எனும் வேலுப்பிள்ளை குமார் பஞ்சரத்தினம் இருவரும் கொழும்பு பிரதம நீதிவான் நிஷாந்த அப்புஆராச்சி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு நீதிவான் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் இருவரையும் கொழும்பு பிரதம நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி, விசாரணைகள் தொடர்பாக நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர்.
தயா மாஸ்டர் விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்க ஊடக பேச்சாளராகவும், மொழி பெயர்ப்பாளராகவும் செயற்பட்டுள்ளார். படையினரின் மனிதாபிமான நடவடிக்கையின் போது கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் இருந்து வந்த மக்களுடன் இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி வந்து, பின்னர் இராணுவத்திடம் சரணடைந்தனர்.
இதனையடுத்து, இருவரும் ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் விசாரணை செய்யப்பட்டு அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது. புலிகள் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என்ற வகையில் இவர்கள் இருவரும், அந்த அமைப்பை அபிவிருத்தி செய்ய பல உதவி, ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளனர்.
தயா மாஸ்டர் ஊடக பேச்சாளராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவியுள்ளார். இவர்களது, செயற்பாடுகள் பொது, பாதுகாப்புக்கும், மக்களின் அமைதிக்கும் பங்கம் விளைவித்து விடுவதை தடுக்கும் வகையிலேயே கைது செய்யப்பட்டனர். பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது உத்தரவின் பேரில் தடுப்புப் காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் மேம்பாட்டுக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கும் ஊடகங்களுக்கும் வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் அவர்களது, செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை கண்டறிய விசாரணை நடத்தப்படுகின்றது.
சுகயீனம் காரணமாக இருவருக்கும் மருந்துகள் வாங்கிக் கொடுக்கப்பட்டதுடன், சட்ட வைத்திய அதிகாரியிடமும் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது? என்று தெரிவித்துள்ளனர். அத்துடன், தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் இருவரையும் நேரில் பார்வையிட்ட கொழும்பு பிரதான நீதிவான், இருவரையும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறும், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை அன்றைய தினம் மன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
Kulan
சட்டவிரோதமான இயக்கத்துக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற வகையில் தண்டனைக்கு உள்ளாகித்தானே ஆகவேண்டும்.
suban
அப்ப கூட்டமைப்பு?