திரு கோணமலை, அனுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள 580 குடும்பங்களுக்கு அடுத்த மாதம் நிரந்தர வீடுகள் வழங்கப்படவுள்ளன. தேசிய வீடமைப்பு அபிவி ருத்தி அதிகார சபை, ஜாதிக சவிய திட்டத்தின் கீழ் 86.27 மில்லியன் ரூபா செலவில் இந்த வீடுகளை நிர்மாணித் திருக்கிறது.
வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரஃபின் ஆலோசனையின் பேரில் நிர்மாணி க்கப்பட்டிருக்கும் இந்த வீடுகள், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம். பி. யின் வழிகாட்டலின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப் படவிருக்கிறது.
இவ் வீடமைப்புத் திட்டங்கள் அனுராதபுரம் மாவட்டத்தில் தெமட்டவெவ, கோணமரியாவ, கீரலகம ஆகிய இடங்களிலும், திருமலை மாவட்டத்தில் கல்யாணபுர, மொரவெவ, கல்கடுவெவ, இந்திகட்டுவ ஆகிய இடங்களிலும், மொனறாகலை மாவட்டத்தில் கேவனப்பிட்டிய, காண்டுகல ஆகிய இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வீடமைப்பு திட்டங்களில் வீதி, குடிநீர் வசதி உட்பட பொது வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.