வடக்கு கிழக்கு துரித அபிவிருத்தித் திட்டத்தில் பங்கு எடுத்துக்கொள்ளும் வகையில் கால்நடை அபிவிருத்தி அமைச்சு பல திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பிட்ட பிரதேசங்களில் பால் பண்ணைக் கிராமங்களை அமைக்கவும் பால் பண்ணையாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கவும் புதிய பால்சார்நத தொழிற்சாலைகளை அமைக்கவும் கால் நடை வளர்ப்பை அபிவிருத்தி செய்யவும் அமைச்சு எதிர்பார்க்கின்றது.
இத்திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கில் கால் நடைகளுக்கான புற் தரைகளை ஒதுக்கவும் அவற்றை மேலும் அபிவிருத்தி செய்யவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதேவேளை கால்நடை அபிவிருத்தி அமைச்சும் அதன்கீழ் உள்ள திணைக்களங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்யவும் முன்வந்துள்ளன.
அதன்படி இடம்பெயர்ந்துள்ள சிறுவர்களுக்குத் தேவையான பாலுடன் தொடர்புடைய உணவுப்பொருட்களை சேகரித்து வருவதுடன் அவற்றை எதிர்வரும் 28 ஆம் திகதி ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஸீ.பீ.ரத்னாயக்க தலைமையிலன குழவினர் இவற்றைக் கையளிக்கும் நிழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.