இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மில்லியன் யூரோவை இத்தாலி பேராயர் சபை அன்பளிப்பு செய்தமைக்காக தனது நன்றியை அதி.வண.மெல்கம் ரஞ்சித்துக்கு ஐ.தே.கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்கடர் ஜெயலத் ஜயவர்தன கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். தங்களின் தலையீட்டின் மூலம் இத்தாலி பேராயர் சபையின் மூலதனத்திலிருந்து இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு மில்லியன் யூரோ ஒதுக்கப்பட்டுள்ளதாக வண. நெலில் ஜோபெரேரா தெரிவித்தார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் காட்டுகின்ற அன்புக்கும் அக்கறைக்கும் இலங்கையின் மக்கள் பிரதிநிதியென்ற ரீதியில் உங்களுக்கு எனது நன்றிகள்.
இதனை முன்னின்று செய்தமைக்காக எனது கௌரவம் அவருக்கு உரித்தாகட்டுமெனவும் ஜெயலத் ஜயவர்தன தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்