திருமலையில் பெருமளவு ஆயுதம் மீட்பு

gun.jpg
திருகோணமலையில் வெவ்வேறு இடங்களிலிருந்து கடந்த சனிக்கிழமை பெருந்தொகை வெடிப்பொருட்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸாரும் படையினரும் நேற்று தெரிவித்தனர்.

கந்தளாய் மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன. கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்திபுரம் எனும் பகுதியிலிருந்து 126- ரி 56 துப்பாக்கி ரவைகள் 01- மெக்சின், 01- சயனைற் குப்பி, 04- கிரனேற் கைக்குண்டுகள் ஆகியன கந்தளாய் பொலிஸ் நிலையத்தின் விசேட பொலிஸ் பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை சனிக்கிழமை மாலை கிண்ணியாவிலிருந்து படையினரால் 01-ரி 56 துப்பாக்கி, 04-மெகசின்கள், 127- ரி 56 ரவைகள், 15 – டெட்டனேட்டர்கள், 02- டெட்டனேட்டர் கோட்கள், 02- கண்ணி வெடிகள், 05- அமுக்க வெடிகள், 02- ரிமோட்கள், 02- மின்கலங்கள், 02- சயனைற் குப்பிகள், 03- கிரனேற்றுகள், 02- கிளேமோர்கள் ஆகியன படையினரால் மீட்கப்பட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • tax
    tax

    கே.பி திருமலையிலிருந்த போராளிகளின் பொறுப்பாளராக இருந்த தேவன் என்பவருடன் தொடர்பு கொண்டு பிரபாவும் பொட்டுவும் சூசையும் முடிந்துவிட்டதாக சொன்ன பின்னர் தேவன் தன்னிடமிருந்த பெருந்தொகை பணத்துடன் இராணுவத்திடம் சரணடைந்தே இக்காட்டிக்கொடுப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதன் பின்னர் திருமலையில் உள்ள பல புலிகளின் மறைவிடங்கள் பிடிபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

    யார் இந்த தேவன்? திருமலையை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் பிரபாகரனின் மெய்பாதுகாவல் அணியில் 90களின் தொடக்கத்தில் இருந்தவர்.பின்னர் கே.பியின் கட்டமைப்பிலும் செயற்பட்டு 90களின் இறுதியில் மலேசியாவில் பிடிபட்ட கப்பலில் அந்த அணிக்கு பொறுப்பாக இருந்தவர். பின்னர் அச்சம்பவத்துடன்நாடு திரும்பிய இவர் புலித்தலைமையால் பல காலமாக ஒதுக்கப்பட்டவர்.பின்னர் சமாதான காலத்தில் பதுமனின் தலைமையில் மூதூருக்கு பொறுப்பாக இருந்தவர்.இப்போது வன்னியில் சரணடைந்த புலிகளின் அணியில் பதுமனும் இடம்பெற்றுள்ளார்.இப்போது பதுமன் கருணாவால் தடுப்பு முகாமொன்றிலிருந்து கருணாவின் சொந்த பாதுகாப்பில் அழைத்துச்செல்லப்பட்டுளார். இனி காட்டிக்கொடுப்புகள் தாராளமாக இருக்க்ப்போகிறது.

    அதேவேளை அம்பாறை தளபதி ராமின் மனைவி,பிள்ளைகள் வவுனியா முகாமில் கருணாவால் இனங்காணப்பட்டு கொழும்பு கு.த.பிரிவினரால் அழைத்துச்செல்லப்பட்டு ராமை சரணடையும்படி பேரம் பேசப்படுகிர்து.

    Reply
  • palli
    palli

    யார் இந்த கே பி?
    இவர் 79-80 களில் இந்தியாவில் இருந்து பாகிஸ்த்தான் வழியாக ஈரானுக்கு ஆள்கடத்தலில் தொடங்கி.பின்பு சிங்கபூர் மலேசியாவில் இருந்து ஆபரணங்கள் இந்தியா இலங்கைக்கு கடத்த தொடங்கி பின்பு மா (கெறெயின்) கடத்தலில் முன்னேறி 83ல் மிக பிரபல்யமான வியாபாரியாக செயல்பட்டார். உன்மையில் இவர் வவுனியா பரம்.வவுனியா தம்பி. அம்பன் இவர்கள் அனைவரும் யாழ்பாணத்தை சேர்ந்த வக்கில் என்பவருக்கு
    கீழ் இந்த தொழிலில் கொடி கட்டி பறந்தனர். இதில் சில காலத்துக்கு பின் அம்பன். தம்பி. கழகத்துக்கு கடத்தல் செய்ய பரம் நாட்டைபாத்து
    ஓட வக்கில் மிக பெரிய கடத்தல்காரன் அவரும் கே பியிம் புலிக்கு கடத்தல்காரர்களாக மாற வக்கில் தொடர்ந்தும் கடத்தல் தொழிலியே கவனம் செலுத்த அந்த பணத்தை(புலிக்கு) கவனிக்கும் பொறுப்பை தானாகவே கே பி எடுத்து கொண்டார். எண்ண முடியாத பணம் அதுக்கு கே பி பொறுப்பு. ஆனால் உழைத்தது முழுக்க (கடத்தல்தான்) வக்கில்தான் ஆனால் அந்த வக்கில் பின்னாள்களில் இந்தியாவில் அனாதையாக இறந்ததாக கேள்விபட்டேன். இந்த கால கட்டத்தில்தான் பாரிஸ்நாதன் கே பி க்கு உதவியாக அவர் வசித்த மலேசியாவுக்கு புலியால் அனுப்பபட்டார் அதன்பின் புலியின் வியாபாரம் ஆள்கடத்தல் கப்பல்கள் என பெருகியதும் எதோ ஒரு காரனத்தால் பொறுப்பொ கே பி இடம் இருந்து நாதனிடம் கை மாறியதாம். அதனால் தான் பல காலம் பொறுமையான் காய் நகத்தி நாதன் மீது மோசடி குற்றசாட்டு சுமத்தி அவருக்கு புலிகளால் மரண தண்டனையும் வாங்கி கொடுத்த பெருமை இந்த கே பிக்கு சேரும்……
    தொடரும் பல்லி.

    Reply
  • Velu
    Velu

    Dear Mr.Palli and others who know the smuggling background of the LTTE and the other groups must bring all the informations to the public, particularly to the Tamil people with the available evidences .Because Our people’s aspirations and our struggle for democracy is used by these Mafia groups as a coverup to run their smuggling business all over the world.

    In the same way without the consideration of this matter and the background of the group ,the Tamil rulling class has used this LTTE smuglling hang as a coverup to achieve their authority over the majority of the poor Tamil people of Srilanka.It is well known fact that the Tamil rulling class have been controlling the Tamil people, before 300 Miles away from Jaffna and they have resided in Karuwakkadu in Colombo. Now the same people who have been residing 10,0000 miles away from Srilanka and leading a luxurious life in UK,Canada,Usa and ect.and continuing the same.

    Reply