முற்றாக விடுவிக்கப்பட்டுள்ள வட மாகாணத்தில் விரைவில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று நடைபெறவுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தலைமையில் அவரது அமைச்சில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலில் அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். இக்கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானங்களை உடனடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, வட மாகாணத்தில் யாழ். மாநகர சபை உட்பட 32 உள்ளுராட்சி சபைகளுக்கு விரைவில் தேர்தலை நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.