இவ் வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதியில் தெங்குப் பொருட்களின் ஏற்றுமதி 56 தவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
கடந்த வருட முதலாம் காலாண்டுப் பகுததியில் மூலப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவிய காரணத்தால் தெங்குப்பொருள் ஏற்றுமதி பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. எனினும் பின்னர் படிப்படியாக அந்த நிலை மாறி ஏற்றுமதியில் அபிவிருத்தி ஏற்பட்டது என்று சபை அறிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, இந்தியா, ஆகிய நாடுகள் வரிசையில் தெங்குப்பொருள் ஏற்றுமதியில் இலங்கை முக்கிய இடம் வகிக்கின்றது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.