ஐ.நா.தலைமைச் செயலரை சந்திக்க அனுமதி மறுப்பு: தமிழ் தேசியக் கூட்டமைப்பு

sureshpremachandran.gifஇலங்கை வந்திருந்த ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்களைச் சந்திக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.  முன்னர் குறித்த நேரத்தில் ஐ.நா. தலைமைச் செயலரை சந்திக்க அவரது பயண ஏற்பாடுகள் இடம்தராது போனதால், அவர் நாட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்னதாக விமான நிலையத்தில் அவரைச் சந்திக்க வெளியுறவு அமைச்சு மூலம் தங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், ஆனால் பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி மறுத்ததை அடுத்து தாங்கள் சந்திக்க முடியாமல் போனது என்றும் திமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.தலைமைச் செயலரைச் சந்திப்பதற்கான நிறைய சந்தர்ப்பங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்தது, அந்த சந்தர்ப்பங்களையெல்லாம் தவற விட்டதன் பின்பு விமான நிலையத்தில் தலைமைச் செயலரை சந்திக்க அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என்று இலங்கை பாதுகாப்புதுறை செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • தமிழ் போராளி
    தமிழ் போராளி

    பிரேமச்சந்திரன் நீரும் சம்பந்தனும் உங்களுக்கு தெரிந்தமாதிரியே நடக்கிறீர்கள் எந்த மக்களின் விருப்பு வெறுப்புக்களைப் பற்றியும் அக்கறை இருப்தாக தெரியவில்லை.

    நீங்கள் இப்ப டில்லிக்கு அடிக்கடி போக வேண்டும் உங்கட பிள்ளைகளை சந்திக்க அப்படியே அரசியல் என்றும் சொல்லிக் கொண்டு.

    Reply