எரித்திரியா மீது ஐ.நா. பாதுகாப்பு சபை தண்டனைத் தடைகளை விதிக்க வேண்டும் என்று ஆப்பிரிக்க ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. தனது உறுப்பு நாடுகளில் ஒன்றுக்கு எதிராக ஆப்பிரிக்க ஒன்றியம் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்திருப்பது இதுவே முதல் முறை.
சோமாலியாவின் இஸ்லாமியவாத கிளர்ச்சிக்காரர்களுக்கு எரித்ரியா ஆயுதங்கள் வழங்கிவருவதாக ஆப்பிரிக்க ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. சோமாலியாவில் இடைகால அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆப்பிரிக்க ஒன்றியம் நான்காயிரம் துருப்பினரை பணியமர்த்தியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
தன் மீதான குற்றச்சாட்டுகளை எரித்ரியா மறுத்துள்ளது. ஆப்பிரிக்க ஒன்றியம் ”திறனற்ற மற்றும் வலிமையற்ற ஓர் அமைப்பு” என்று கூறி அதனைப் புறக்கணித்துள்ள எரித்ரிய தகவல் தொடர்பு அமைச்சர் அலி அப்து, எரித்ரியா அவ்வமைப்பிலிருந்து தனது உறுப்புரிமையை இடைநிறுத்திக்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.