எங்களது அமைதி சரணடைவதற்கு அல்ல – விடுதலைப் புலிகள்

எங்களது துப்பாக்கிகள் தற்காலிகமாக மெளனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல. தலைமையின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என விடுதலைப் புலிகளின் யாழ் குடா படைப் பிரிவுத் தளபதி வெற்றிக்குமரன் தெரிவித்துள்ளார் என இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ் குடா பகுதியில் தலைமறைவாக இருக்கும் விடுதலைப் புலிகள் உடனடியாக சரணடைய வேண்டும் என ராணுவம் எச்சரித்துள்ளது. இதற்கு விடுதலைப் புலிகள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் எச்சரிக்கையை புலிகள் நிராகரித்துள்ளனர்.

இதுகுறித்து யாழ் குடா பகுதிக்கான புலிகள் படைப் பிரிவின் தளபதியான வெற்றிக்குமரன் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்இ எமது துப்பாக்கிகள் தற்காலிகமாக மௌனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல, உரிய நேரத்தில் தலைமையின் உத்தரவிற்காக காத்திருக்கின்றோம்.

எங்களது இயக்கப் போராளிகள் என்றும் இல்லாத அளவு மிக உறுதியுடன் போராடத் தயாராக இருக்கின்றார்கள். அவர்கள் சிங்கள ராணுவத்தின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்க மாட்டார்கள். ராணுவம் இன்று பெரும் உளவியல் மற்றும் மறைமுக புலனாய்வு போரை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. எனவே மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பயங்கரவாதத்தை அழிப்பதகாகக் கூறி சுதந்திரப் போராட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக இலங்கை அரசு கூறி வரும் மாயை மிக விரைவில் உடையும் என்று அவர் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply to msri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இவர்கள் இன்னும் ஒரு தொகுதி மக்களைக் காவு வாங்காது ஓய மாட்டார்கள் என்பதையே இந்த அறிக்கை காண்பிக்கின்றது. இதனால் இனி மக்களே இப்படியானவர்களைப் பிடித்து நையம்புடைத்து இராணுவத்தினரிடம் கையளிப்பார்கள்.

    Reply
  • BC
    BC

    இது புலம்பெயர்ந்தவர்களின் ஆசை தான் இப்படி அறிக்கையாக வந்துள்ளது.அங்கே என்றால் மக்களே கவனித்து கொள்வார்கள்.

    Reply
  • thurai
    thurai

    புலிகள் இதுவரை காலமும் யாருக்காக போராடினார்களென்பதை இன்னமும் சில தமிழர் புரியவில்லை. தலைமையைக்காக்க வென்பதை உலகமறிந்துவிட்டது. ஈழத்தமிழ்ரிற்கும் புலிகளிற்கும் இனிமேல் சம்பந்தமேயில்லை.

    புலத்தில் வாழும் புலிகளின் வாழ்விற்கு புலிகளின் நடமாட்டம் ஈழத்தில் அவசியம் தேவை.

    துரை

    Reply
  • Ramasamy thasan
    Ramasamy thasan

    இதில் பின்னூட்டம் விடுபவர்களிற்கு மகிந்தவிடம் இருந்து பணம் வருகின்றதா, அல்லது மனநோயாளிகளா? புலிகள் பிழையானவர்கள் என்றால், அவர்களை இனப்படுகொலை செய்யும் இராணுவத்திடம் பிடித்து கொடுக்க வேண்டும் என்பவர்களை என்னவென்று அழைக்கலாம்?

    Reply
  • msri
    msri

    வானத்திலிருந்து> “அசரீதி” வார்த்தைகள் கேட்கின்றன! பிரபாகரன் மீண்டும் ஐனனமாகப் போகின்றார்! தமிழ்மக்களுக்கு மீண்டும் ஓர் விடிவெள்ளி உதயமாகின்றது!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புலித்தலைவர் உயிரோடிருக்கின்றார். இது 1000 மடங்கு நம்பகமான செய்தி எனப் புலுடா விட்டவர்கள் எனி என்ன சொல்லப் போகின்றார்கள். கே.பி இன்று உத்தியோகபூர்வமாக பிரபாகரன் இறந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.

    Reply
  • Sutha
    Sutha

    யார் இந்த கே.பி. நாளை நானும் ஒரு அறிக்கையை கே.பியின் பெயரில் விட்டால் தேசம் பிரசுரிக்குமா? தொலைபேசியில் உரிமைகோரும் தனிநபர்கள் பலர் இனி கேபியின் பெயரில் குழப்பப் போகிறார்கள். ………….

    Reply
  • rohan
    rohan

    பூச்சியத்தின் ஆயிரம் மடங்கு பூச்சியம் தானே.

    Reply