புலிகளிடம் மீட்ட ஆயுதங்கள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் – பிரதமர் வலியுறுத்தல்

விடுதலைப் புலிகள் வசமிருந்து கைப்பற்றப்பட்ட பாரிய ஆயுதங்கள் எங்கிருந்து. எவ்வாறு அங்கு சென்றன என்பது குறித்து விசாரித்தறிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே பாராளுமன்ற மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இராணுவ வெற்றி பெற்ற படையினரை கௌரவிக்கும் முகமான தேசிய நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

“பயங்கரவாதிகளிடமிருந்து படையினர் பெருந்தொகை ஆயுதங்களை மீட்டுள்ளனர். படையினர் வசம் இல்லாத பாரிய ஆயுதங்கள் கூட அங்கிருந்து கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் எப்படி, எங்கிருந்து வந்தன, யாரால் வழங்கப்பட்டவை என்பதே இங்கு மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. எனவே, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து இது தொடர்பாக விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென நான் யோசனை செய்கிறேன்’ என்று பிரதமர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply to rohan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • rohan
    rohan

    புலிகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் மீட்க என சிறிலங்கா அரசு வாங்கிய ஆயுதங்கள் பற்றியும் விசாரிப்பது நலம்.

    கிடப்பில் போடப்பட்டிருந்து சிறிலங்காவுக்கு *விற்கப்பட்ட* சாமான்கள், ஒரு முறை சப்ளை இரு முறை பேய்மென்ற் சாமான்கள், இவற்றுக்காக தரப்பட்ட கொள்ளை கொள்ளையான கொமிஷன்கள் என்று நிறைய விஷயங்கள் உள்ளன. ………. ஆலோசனை தான் கேட்க மாட்டோம், துட்டு என்றால் தாராளமாக் வாங்கலாம் – அப்படியா பிரதமரே?

    Reply