![]()
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க தமிழ் பேசும் மருத்துவர்களை முன்வந்து உதவுமாறு சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனைத்து நலன்புரி நிலையங்களுக்குமான மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு சுழற்சி முறையில் மருத்துவர்கள் குழு பணியாற்றச் செல்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் இப்பணியில் இணைந்து கொள்ளும் மருத்துவர்களுக்கான தங்குமிட வசதிகள் மற்றும் ஏனைய வசதிகள் அனைத்தையும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் ஊடாக ஏற்பாடு செய்து தருவதற்கும் முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி பேசக் கூடிய மருத்துவர்களைக் கொண்டு மருத்துவ முகாம் ஒன்றை அமைப்பதற்கு மேற்கொள்படும் இம்முயற்சிக்கு மருத்துவர்கள் மனிதாபிமான அடிப்படையில் முன்வர வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளதுடன் எமது மக்கள் தற்போது எதிர்கொண்டிருக்கும் உணவு, உடை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை அவர்களின் மருத்துவத் தேவைகளைப் பொறுத்த வரையில் அதற்கு விசேட ஏற்பாடுகள் அவசியம் என்பதை தான் புரிந்து கொண்டுள்ளதாகவும் எனவே இம்மாபெரும் மனித நேயப் பணியில் அனைவரும் உணர்வோடும் அர்ப்பணிப்போடும் பணியாற்ற இணைந்து கொள்ளுமாறு தான் வேண்டுகோள் விடுப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
accu
நன்றி தோழர், போர்ப்புயல் ஓய்ந்துவிட்டது. ஆனால் அதன் பாதிப்பு தாங்கமுடியாத வேதனையைத் தருகிறது. தடுப்புமுகாம்களில் இருக்கும் மக்களின் பிரச்சனைதான் இன்றைய தலையாய பிரச்சனை. அதை நிவர்த்தி செய்வதற்க்கு உங்களை போன்றவர்களின் தன்னலமற்ற முயற்சிகள்தான் பெரும் நன்மை பயக்கும் பெரும் மாற்றங்களை ஏற்ப்படுத்தும்.
தோழரே தொடர்ந்து செயல்ப்படுங்கள் அதன் மூலம் அனைத்து தமிழ் மக்களின் மனதிலும் நிலைத்து நிற்ப்பீர்கள்!
msri
இவர்களையும் கடத்த மாட்டீர்களோ?
பார்த்திபன்
புலிகளுக்காக புலத்தில் போராட்டம் நடாத்தி வெறும் விளம்பரங்களைத் தேடிய வைத்தியப் புலிகள், உண்மையான மக்கள் சேவைக்காகவும் தம்மை கொஞ்சம் அர்ப்பணிக்கலாமே!!